கண்டியில் இன்று காலை அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்க கோரி பிரமாண்ட பேரணி இடம்பெற்றது.
அத்துரலிய ரத்ன தேரர் தலதா மாளிகை முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் அங்கு குழுமியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதால், பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.