ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்ல நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தை, கொழும்பு 6 என்ற முகவரிமைய சேர்ந்த 36 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குறுந்தகவல் ஒன்று உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.