பிரித்தானியாவிலிருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம் வெளியிட்டுள்ளது.
துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடத்தப்படுகின்ற அதிகள் அவர்களது சொந்த நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில், கடந்த ஆண்டு மாத்திரம் பிரித்தானியா 43 இலங்கை அகதிகளை பலவந்தமாக நாடு கடத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.