தற் கொலை தாரியுடன் தொடர்புடையவர் முக்கிய கட்சியல் உயர்பதவி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 19, 2019

தற் கொலை தாரியுடன் தொடர்புடையவர் முக்கிய கட்சியல் உயர்பதவி!


அதே நேரத்தில் குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்ட ஒருவரை விடுவிப்பதற்காக அமைச்சர் ரிசாட் பதியூதின் மூன்று தடவை இராணுவ தளபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் அவர் மூலமாக மன்னார் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சீர் குழைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அண்மையில் தாராபுரபகுதியில் அமைச்சருக்கு சொந்தமான விடுதியில் சந்தேகத்திற்கு இடமான இலக்கத்தகடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஆனாலும் குறித்த இலக்க தகடானது இலங்கை மோட்டார் வாகன திணைக்களத்தினால் (ஆர்.எம்.பி) வினியோகிக்கப்படவில்லை எனவும் எதோ ஒரு வகையில் தவறான நடவடிக்கைக்காகவே குறித்த இலகக்கத் தகடு பயன் பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழுமையான விசாரணைகள் நடத்துவதற்காக அவர் மீது கொண்டு வரப்படுகின்ற நம்பிக்கை இல்லா பிரேரணையை ஆதரித்து அவருக்கு இந்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பாகவும் குறுகிய காலத்தில் அவர் எவ்வாறு செல்வந்தராக வந்தார்? என்பது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒட்டு மொத்த மன்னார் தமிழ் அரசு கட்சி உயர் மட்ட குழுவினராலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.