விருத்தாசலம் மாவட்டத்தில் செல்போன் நம்பரை காதலி பிளாக் லிஸ்ட்டில் போட்டதற்காக வீடு புகுந்து காதலியை வெட்டி கொலை செய்தேன் என காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திலகவதி என்பவர் தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் நேற்று தனியாக இருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காதலன் ஆகாஷ் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நானும், திலகவதியும் பள்ளியில் இருந்து காதலித்து வருகிறோம்.
நான் கூலிவேலை செய்துவருகிறேன், கடந்த சில நாள்களாக கிரிக்கெட் விளையாடச் சென்ற காரணத்தால் திலகவதியுடன பேச முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த திலகவதி எனது செல்போன் நம்பரை பிளாக் லிஸ்ட்டில் போட்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால், நேற்று திலகவதி வீட்டுக்கு சென்று பேசியபோது அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதில், மறைத்து வைத்திருந்த கத்தியால் திலகவதியை குத்தி கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலைசெய்துவிட்டு வெளியூருக்கு தப்பி செல்ல முடிவு செய்தபோது தான் பொலிசில் சிக்கிவிட்டேன் என கூறியுள்ளார்.