வடகொரியா கடந்ந ஒரு வாரத்தில் இரண்டு முறை ஏவுகணை சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை சோதனையை உறுதிப்படுத்தும் வகையில் வட கொரியா ஊடகம் ஒன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வட கொரியாவின் அண்மைய ஆயுத சோதனைகள் பற்றி குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த சோதனைகளால் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை என்று கூறினார்.
அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள் என்றும் அது குறித்து தொடர்ந்து பேசுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இன்னமும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவில்லை என்றே நான் எண்ணுகிறேன் என்று டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முடங்கியுள்ள அணு ஆயுதப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது பற்றிய பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க தூதர் தென்கொரிய தலைநகர் சோலுக்கு பயணம் மேற்கொண்டது ஒர் முக்கிய நிகழ்வாக சர்வதேச அளவில் பார்க்கப்பட்டது.
இதே சமயம் வடகொரியா சர்வதேச தடைகளை மீறியதாக குற்றம்சாட்டி அந்நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. வட கொரிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றறுவது இதுவே முதல்முறையாகும்.