தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இலங்கை தலைவர் சஹ்ரானுக்குச் சொந்தமான வீட்டை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பெற்றுள்ளனர்.
தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தெமட்டகொட – மஹவில கார்டினில் அமைந்துள்ள வீடே இவ்வாறு பொறுப்பேற்றுகொண்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தனர்.
இதேவேளை, தற்கொலை குண்டுதாரிகளின் 14 கோடி ரூபாய் பணமும் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் ஒரு தொகை பணத்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் ஏனைய பணத் தொகை வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த வங்கிக் கணக்கை முடக்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர்களின் ஏனைய சொத்துக்கள் தொடர்பாகவும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.