அநுராதபுரம் – இப்லோகம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல் ஒன்றையடுத்து பெருந்தொகையான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த வெடிமருந்துகளை வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கலாவெவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கலாவெவ, விஜிதபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும். அவரிடமிருந்து 243 ஜெலட் நைட் குச்சிகள், 12.5 கிலோ கிராம் வெடிமருந்துகள், 145 டெடனேடர்கள் மற்றும் 36 கிலோ கிராம் அமோனியா நைத்திரேற்று என்பன கைபற்றப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும். விசாரணையின் பின்னர் சந்தேகநபரை அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.