வெடிகுண்டு அச்சுறுத்தலை தொடர்ந்து வவுனியாவிலும் உச்சகட்ட பாதுகாப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, May 13, 2019

வெடிகுண்டு அச்சுறுத்தலை தொடர்ந்து வவுனியாவிலும் உச்சகட்ட பாதுகாப்புவெடிகுண்டு அச்சுறுத்தலை தொடர்ந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை ஊழியர்களது வாகனங்களும் உட்செல்ல அனுமதிக்கபடவில்லை. இதனால் 300 மீற்றர் தொலைவில் உள்ள வவுனியா நகரசபை மைதானத்தில் ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்திவிட்டு வைத்தியசாலைக்கு நடந்து சென்றிருந்தனர்.

வெளிமாவட்டங்களிலிருந்து வவுனியா நகரினுள் உள்செல்லும் வாகனங்கள், வெளிச்செல்லும் வாகனங்கள் மற்றும் பயணிகளும் சோதனைக்குட்படுத்தப்படுத்தபட்ட பின்னரே பயணம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர்.