நுவரெலியா, சீன்- பூண்டுலோயா பிரதான வீதியில இடம்பெற்ற வாகன விபத்த்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பூண்டுலோயா- டன்சினன் தோட்டம், அக்கரமலை பிரிவைச் சேர்ந்த சந்திரமோகன் சாலினி (16) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சீன் தோட்டத்திலிருந்து பூண்டுலோயா நகரத்தை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, பூண்டுலோயா நகரத்திலிருந்து சீன் தோட்டத்தை நோக்கி வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டியை நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இதன்போது சீன் தோட்டத்திலிருந்து பூண்டுலோயா நகரத்தை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியில் சாரதியுடன் பயணித்த சகோதரிகளில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சாரதியும், பெண்ணும் ஆபத்தான நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்கைச்காக கம்பளை மாவட்ட வைத்தியாசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது