காலி, இமதுவ பிரதேச சபைக்குள் வாள் ஒன்றை கொண்டுவந்த உறுப்பினரால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ரேணுகாதேவி என்ற உறுப்பினர் இந்த வாளை கொண்டுவந்ததுடன் இது தற்பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்டதாக கூறினார்.
பெண்களை பாதுகாத்துக்கொள்ள வாள்கள் வைத்திருப்பதாக சொல்லப்படுவதால் இப்படி வாளை கொண்டுவந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து பெரும் குழப்பம் ஏற்பட்டதால் சபைத் தலைவர் அந்த வாளை பெற்று வெளியில் எடுத்துச் செல்ல பணித்தார்.அதனையடுத்து சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின