அதிமுகவின் கோட்டையான பொள்ளாச்சி எம்பி தொகுதி.. இனி அமமுகவுக்கு சொந்தமாமே! எக்சிட் போல் கூறுவது என்ன? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 20, 2019

அதிமுகவின் கோட்டையான பொள்ளாச்சி எம்பி தொகுதி.. இனி அமமுகவுக்கு சொந்தமாமே! எக்சிட் போல் கூறுவது என்ன?


அதிமுகவின் கோட்டையான பொள்ளாச்சி லோக்சபா தொகுதி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி அமமுக வசம் சென்றுவிடும் என தெரிகிறது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் மத்தியில் பாஜக ஆட்சியே அமையும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தை பொருத்தவரை கடந்த தேர்தலில் ஜெயலலிதா சிங்கமாக இருந்து பெற்ற 37 எம்பிக்களுக்கு பதில் வெறும் 6 அல்லது 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கணிப்புகள் கூறியுள்ளன.
அதிலும் நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்புகளில் தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளிலும் எந்தெந்த கட்சி வெற்றி பெறும் என டீட்டெய்ல்டு ரிப்போர்ட் உள்ளது. அதன்படி பொள்ளாச்சியில் அமமுக வெற்றி பெறும் என கூறப்படுகிறது.

பொள்ளாச்சி அதிமுகவின் கோட்டையாகும். இங்கு பெரும்பாலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை வெற்றி பெற்ற சி மகேந்திரனே இந்த முறையும் அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ளார். அது போல் திமுக சார்பில் கே சண்முகசுந்தரமும் அமமுக சார்பில் முத்துகுமாரும் போட்டியிட்டுள்ளனர்.

கடந்த முறை திமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளிய அளவுக்கு பொள்ளாச்சி அதிமுகவின் கோட்டையானது. இந்த முறை கருத்து கணிப்புகளின்படி அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்பட்டதற்கான காரணம் பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் பலாத்காரத்தில் அதிமுக பிரமுகரின் பெயர் அடிப்பட்டதுதான் காரணமாக இருக்கும் என தெரிகிறது.

கடந்த தேர்தலை போல் இந்த தேர்தலிலும் திமுக 3-ஆவது இடத்துக்கு தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவையெல்லாமே கருத்து கணிப்புகளின்படி கூறப்படுவது மட்டுமே, மற்றபடி 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாவதை வைத்தே எதையும் சொல்ல முடியும்.