குருணாகல் தும் மோதர பள்ளிவாசலை சிங்கள கடையர்கள் தாக்குதல் நடத்துவதற்கு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உதவியதாக கூறி அண்மையில் காணொளி ஒன்று வெளியாகி இருந்தது.
ஆனால் அதனை இராணுவ தளபதி மறுத்ததுடன் துப்பாக்கி பட்டியை சரிசெய்யும் காட்சியே வன்முயாளர்களை அழைப்பது போல் உள்ளது இராணுவத்தினர் ஒரு போதும் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது குறித்த காணொளி வெளியாகிய பள்ளிவாசலின் உள்ளே நடந்த சம்பவங்கள் அடங்கிய காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதவாது குறித்த காணொளி வெளியாகிய தும் மோதர பள்ளிவாசலில் இருந்த 30 மேற்பட்ட முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்த இராணுவத்தினர் குறித்த இளைஞர்களை பள்ளிவாசலுக்கு முன் முட்டுக்காலில் வைத்திருந்த சந்தர்ப்பத்தில் அந்த பகுதிக்கு வந்த சிங்கள காடையர்கள் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய போது அதற்கு எதிராக பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த முஸ்லீம் இளைஞர்கள் சிலரும் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.
அந்த நேரத்தில் செய்வதறியாது தினரிய இராணுவத்தினர் சிங்கள காடையர்களை களைப்பதற்காக வெளியேறும் சந்தர்ப்பத்தில் பள்ளிவாசலுக்குள் முட்டுக்காலில் இருந்த முஸ்லீம் இளைஞர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அது குறித்த காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
தாக்குதலின் பின்னனியில் இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்த கானொளியை பார்ப்பதன் ஊடாக யார் இரானுவத்தை தாக்கியது என்பது மிகத் தொழிவாக புலனாகின்றது என ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் கொல்டன் பெனார்ண்டோ ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.