தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இடம்பெற்ற போது! ஞானசார தேரர் வெளிப்படுத்தும் விடயம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 29, 2019

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இடம்பெற்ற போது! ஞானசார தேரர் வெளிப்படுத்தும் விடயம்

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இடம்பெற்ற போது அரசியல்வாதிகள் செயற்பட்ட விதம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இஸ்லாமிய தீவிரவாதம் போன்றில்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டனர்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கான காரணம் தொடர்பில் ஆராயாமல் தமக்கான நலன்கள் தொடர்பில் மாத்திரம் சிந்தித்து அரசியல்வாதிகள் செயற்பட்டனர்.

இதனாலேயே நாட்டில் 30 வருட காலம் யுத்தம் நீடித்தது. அதேவேளை விடுதலைப் புலிகளுக்கு அரசியல் நோக்கம் காணப்பட்டது.

ஆனால் அண்மையில் இலங்கையின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு நோக்கம் என்பது இல்லை.

எனவே இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயற்பாட்டினை ஒழிக்க மதத் தலைவர்களின் தலையீடுகளே அவசியமாகும்.

இதில் அரசியல்வாதிகள் தலையிடாமல் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் அவதானம் செலுத்தினால் போதுமானது என தெரிவித்துள்ளார்.