மாங்குளம் பகுதியில் நேற்று இரவு ரவுடிக்கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதில் பெண்கள் உட்பட ஐவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் மாங்குளம் புதியகொலனியை சேர்ந்த சிவராசா என்பவரின் வீட்டுக்குள் வாள், கைக்கத்தி, கம்பி, பொல்லு முதலிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கிருந்தவர்களை சரமாரியாகத் தாக்கியதுடன் அங்கிருந்த பெறுமதியான பொருட்களையும் சேதமாக்கியுள்ளனர்.
இவர்களது தாக்குதலுக்கு உள்ளாகி பெண்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்த சில பெறுமதியான உடமைகளையும் ரவுடிக்கும்பல் திருடிக்கொண்டு சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.