இந்தியா, கேரளாவில் தாய்ப்பாலுக்காக அழுத குழந்தையை வாயை மூடிக்கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டினங்காடு காலனியை சேர்ந்த ஷரோன் – ஆதிரா தம்பதிக்கு ஆதிஷா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 30ஆம் திகதி இரவு குழந்தை ஆதிஷா கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து போனதாக கூறி தாய் ஆதிரா, கதறி அழுதுள்ளார்.
ஆனால் குழந்தை உடலில் எந்தவொரு காயமும் இல்லாததாலும், குழந்தை மூச்சு திணறி இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாலும் இது தொடர்பாக பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
பொலிசார் ஆதிராவை விசாரித்த போது இரவு 12.30 மணிக்கு நான் தொலைபேசியில், வாட்ஸ் அப் மூலம் தோழியிடம் இணைப்பிலிருந்தேன்.
அப்போது குழந்தை பாலுக்கு அழுதது. கொஞ்ச நேரம் கழித்து பால் கொடுக்கலாம் என குழந்தையை தட்டி கொடுத்த போதும் அழுகையை நிறுத்தாமல் இன்னும் சத்தமாக அழுதது.
உடனே சத்தம் வெளியே கேட்காமல் இருக்க குழந்தையின் வாயை பொத்தியபடியே வாட்ஸ் அப்பில் மூழ்கியிருந்ததால் குழந்தை இறந்து விட்டதெனக் கூறியுள்ளார்.