சங்கரில்லா ஹோட்டலில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது மொஹமட் சஹ்ரான்தான் என்பது உறுதியாகியுள்ளது. டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் அதை உறுதி செய்துள்ளன.
சஹ்ரானின் மகளிடமிருந்து பெற்ற இரத்த மாதிரி, சங்கரில்லா ஹோட்டலில் மீட்கப்பட்ட சஹ்ரானுடையது என கருதப்பட்ட உடல் பாகம் என்பவற்றை டி.என்.ஏ பரிசோதனைக்குட்படுத்தியபோது இந்த முடிவு கிட்டியது.
அடுத்த வாரம் நீதிமன்றத்தில் பொலிசார் இதை அறிவிப்பார்கள்.