வடமேற்கு லண்டனில் ஹரோ நகரின் லியோன் வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் இன்று காலை 9.24 அளவில் தீவிபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீயால் பாதிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியிலிருந்து 80 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எட்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தப்பட்டதாக லண்டன் தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது.
இத்தீவிபத்தால் எவரும் பாதிக்கப்படவில்லையென அறிவித்துள்ள பொலிஸார் தீவிபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காலை 10.45 அளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.