சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் மிகவும் ஆபதான ஆயுதம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் செயற்பாட்டாளர் ஒருவரிடமிருந்து விசேட சென்டிநெல் (Sentinel) ரக ட்ரோன் கமரா ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த விசேட ட்ரோன் கமராவில் ஆபத்தான வெடி பொருட்களை வைத்து பாரிய தாக்குதல்களை மேற்கொள்வதற்கு ஐ.எஸ் அமைப்பினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஐ.எஸ் அமைப்பினர் பயன்படுத்தும் சாத்தானின் தாய் எனப்படும் மிக பயங்கரமான வெடிபொருள் பயன்படுத்தி தற்கொலை குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் போது இந்த குண்டே பயன்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
Sentinel drone camera மற்றும் TNT பொருட்களை ஐ.எஸ் அமைப்பினர் பயன்படுத்துவதாக இன்டர்போல் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.