இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில்சிவப்பு நிற ஆடையுடன் உலாவியவர் யார்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 13, 2019

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில்சிவப்பு நிற ஆடையுடன் உலாவியவர் யார்?

அனைத்து விதமான தகவல்களையும் நாட்டுமக்களுக்கு வெளிப்படுத்துவது ஊடகத்துறையின் கடமையும் உரிமையும் ஆகும் . எனினும் சில தகவல்களை வெளியிடும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைப்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடும்போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் .

அனைத்துவிதமான செய்தி, தகவல்களை வெளியிடுவதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின் உண்மை தன்மை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

நாம் தெரிவிக்கும் தகவல் சிலவேளைகளில் நிரபராதிகளை சந்தேக நபர்கள் எனும் போர்வையில் காட்டும். இது அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய தவறாக அமையும் “என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பொய் குற்றச்சாட்டை நான் யாரிடம் போய் கூறுவது. எனக்கு இந்த சமூகத்தில் முகம்கொடுக்கவும், எனது மனைவி பிள்ளைகளை நினைத்தும், இந்த சூழலில் எனக்கு உயிர் வாழ்வதற்கும் மிகவும் பயமாகவுள்ளது. இந்த சம்பவத்தால் எனது உறவினர்களுக்கும் பெறும் அவமானம் ஏற்பட்டுள்ளது” என அவர் மிகவும் கவலையுடன் மேற்கண்டவாறு எமக்கு தெரிவித்தார்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரி கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு செல்லும் பாதையில் மதிலுக்கருகில் தொலைப்பேசியில் கதைத்துக்கொண்டிருந்த சிவப்பு டிசர்ட் அணிந்திருந்த நபரே இவர்.

மேற்படி சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி கேமராவில் பதிவாகியிருந்த கணொளியாகும் என்பதுடன் இந்த காணொளி தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பபட்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் ஒரு தீவிரவாதியாக கருதப்படுகின்றார்.



இவரை அனைவருக்கும் கட்டாயமாக நினைவிருக்கும் ஏனென்றால் அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களிலும் அவரது உருவம் வட்டமிட்டு குறித்து கட்டப்பட்டிருந்தமையே ஆகும். இவ்வாறு வட்டமிட்டு குறித்தக்காட்டப்பட்ட நாபரை பற்றி விசாரித்த போது இவர் கிராமத்தில் வாழும் சாதாரண அப்பாவித்தனமான நபர் என குறிப்பிட்டனர்.

இதனை கேள்விப்பட்டதும் எனது மனம் சங்கடத்திற்குள்ளானதுடன் நான் அவரை தேடிச்சென்றேன். நான் அவரது வீட்டிற்கு சென்ற போது வீட்டில் குறிப்பிட்ட நாபர் இருக்கவில்லை எனினும் அவரது மனைவி, பிள்ளைகள் இருவர், தங்கை ஒருவர் மாத்திரமே இருந்தனர்.

நான் மனைவியிடம் கதைத்தப்பேது அவர் கூறியதாவது: எனது கணவர் பெயர் அரோஷன் ஜூட் அவர் தற்போது வீட்டில் இல்லை தொழிலுக்காக வெளியே சென்றுள்ளார்.



உயிர்த்த ஞாயிறு காணொளி சம்பவத்தினால் நாங்கள் சொல்லமுடியாதளவு துன்பங்களை அனுபவித்தோம் நாம் இன்றுவரை பயத்துடனே வாழ்கின்றோம்.

21 ஆம் திகதி நாம் நால்வரும் இறைவழிப்பாட்டிற்காக தேவாலயத்திற்கு சென்று அனைவரும் ஒரே இடத்திலேயே இருந்தோம். அப்போது எனது கணவருக்கு அருட்தந்தை நேவிலிடம் இருந்து அழைப்பொன்று வந்தது எனவே அவர் வெளியே சென்றார்.

சிறிது நேரத்தின் பின்னர் கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் குண்டு வெடித்தது. நான் தூக்கி வீசப்பட்டது போல் உணர்ந்தோன் மகன் என்னை கட்டிப்பித்துக்கொண்டான் என்னுடைய கால் காயங்களுள்ளானது நான் பெரிய மகனின் கைகளை பற்றிப்பிடித்துக்கொண்டேன். நாம் நவலோக வைத்தியசாலைக்கு சென்று காயங்களுக்கு சிகிச்சைப்பெற்று வீட்டிற்கு திரும்பினோம்



திங்கட்கிழமை பொலிஸார் நமது வீட்டிற்கு வந்து எனது கணவர் கேமராவில் உள்ளதாக கூறினார். எம்முடைய தொலைப்பேசி இலக்கத்தையும் பெற்றுக்கொண்டு சென்றனர். அதன் பின்னரே எனது கனவருடன் சம்பந்தப்பட்ட சி.சி.டி கேமராவில் பதிவாகியிருந்த கணொளியை தொலைக்காட்சியில் பார்த்தோம். அதன் பின்னர் எம்மை பயம் பற்றிக்கொண்டது.

பின்னர் நாம் இது தொடர்பாக தெரிவிக்க நீர்கொழும்பு உளவுத்துறை பொலிஸ் பிரிவிற்கு சொன்றோம். அங்கு எமது தகவல்களை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு செல்லுமாறு எம்மிடம் கூறியதுடன் எமக்கு பாதுகாப்பு வேண்டுமா எனவும் வினாவினர்.

கணவர் புதன்கிழமை வேலைக்கு சென்றுவிட்டார். அவர் தூரத்தில் வோலை செய்கின்றார். நான் எமது பகுதியில் இடம்பெற்ற அனைத்து மரணவீட்டிற்கும் சென்றேன் அங்கிருந்த மக்கள் அவரை கொல்ல வேண்டும் என்று கோபத்துடன் எசுகின்றனர். எனினும் எனது கணவர் ஒரு நிரபராதி ஆவார்.

நான் அழுதுக்கொண்டே விட்டிற்கு வந்தேன் சிலர் எம்மை பற்றி தேடிப்பார்த்தனர். இதற்கு முன்னர் எமது வீட்டிற்கு வந்தவர்கள் வருவதை நிறுத்திக்கொண்டனர்.நாம் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு முகம்கொடுத்தோம். நான் எனது பிள்ளைகள் பற்றிய பயத்தில் இருந்தேன் இரவு முழுவதும் எமது வீட்டிற்கு முன்னால் நாய் குறைத்துக்கொண்டே இருக்கும் ஆழ் நடமாட்டம் இருப்பது போன்று தோன்றும் எனினும் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு பயம். எனது கணவரை டிவியில் பார்த்த உறவினர்கள் அவரை இனங்கண்டுக்கொண்டனர் எனினும் பயம் காரணமாக வெளியில் தெரிவிக்கவில்லை.

நாம் இந்த சம்பவம் காரணமாக மிகவும் மோசமான நிலைக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது ஊடகங்கள் எனது கணவரை கொடூரமான தீவிரவாதியாக சித்தரித்துள்ளது. அவர் சம்பவ தினத்தன்று எங்கு இருந்தார் என்ன செய்துகொண்டிருந்தார் என அவரிடம் கேட்டால் தெரியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு சிரியானி தனது கணவருடன் அழைப்பினை ஏற்படுத்தி கொடுத்தார். பாடசாலை செல்லும் வயதிலிருக்கும் இவர்களது பிள்ளைகள் இருவரும் இன்னும் பயத்துடனே இருக்கின்றனர்.



நாங்கள் தேவாலயத்திற்கு சென்று எப்போதும் வழிபாட்டில் ஈடுப்படும் இடத்திலேயே இருந்தோம் . அப்போது அருட்தந்தையின் அழைப்பு வர நான் அவருடன் தொடர்பு கொள்வதற்காக வெளியே வந்தேன். அவ்வாறு நான் வந்து நின்ற இடமே பிரதர் ஹவுஸ், அருட்தந்தையும் அவ்விடத்திற்கு வந்தார்.(அந்த காணொளியிலும் அவர் வருவது தெரிகிறது)

அப்போது பையொன்றை சுமந்துக் கொண்டு இளைஞர் ஒருவர் தேவாலயம் பக்கம் செல்வதையும் அவதானித்தேன். அவர் பார்ப்பதற்கு மதிக்க தக்கவராகவே தோற்றமளித்தார். அப்போது நான் அது யார் என சிந்தித்தேன். அவர் சென்று சிறிது நேரத்திற்கு பின் வெடிப்புச் சத்தமொன்று கேட்டது

நான் அது குண்டு வெடிப்பு என்று நினைக்க வில்லை, மின்விளக்கு வெடித்திருக்கும் என்றே நினைத்தேன். அதன்போது நான் தேவாலயத்தை நோக்கி ஓடினேன். அப்போது அங்கிருந்த மக்கள் குண்டு வெடித்து விட்டதாக குறிப்பிட்டார்கள், நான் பையொன்றை சுமந்துக் கொண்டு இளைஞர் ஒருவர் இப்பகுதிக்கு வந்தார் என தெரிவித்தேன். அவர் பார்ப்பதற்கு கௌரவமானவராக தெரிந்ததினால் நான் அரை சந்தேகிக்க வில்லை .

பிறகு அந்த நபர்தான் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என நான் அறிந்தேன் . அதுமட்டுமல்ல அந்த நபருடன் என்னையும் கட்டம் பொட்டு காட்டுகின்றார்கள் என்று அறிந்தவுடன் மிகவும் பயந்தேன். கடவுளே நான் என்ன செய்வதென்று சிந்தித்தேன் ,பிறகு பொலிஸாரிடம் அழைப்பினை மேற்கொண்டு இது தொடர்பில் தெரிவித்தேன். பொலிஸார் பிரச்சினையில்லை என தெரிவித்தனர். பின் என் மணைவி பயத்தில் உள்ளார் எனவும் குறிப்பிட்டேன் ஆனால் ஒருவரும் என்னை சந்தேகிக்க வில்லை. உதவி பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து இது தொடர்பில் தெரிவித்தோம்.



நான் அந்த ஊடகத்துடன் தொடர்பு கொண்டேன், நான் நிரபராதி என உறுதிபடுத்திய போதும் இவர்கள் அதற்காக மிக குறைவான காலத்தையே எனக்கு கொடுத்தார்கள். ஆனால் ஏனைய ஊடகங்களில் அந்த காலம் கூட வழங்கப்பட வில்லை, எம் ஊர்மக்களுக்கு என்னைப்பற்றி தெரிந்து இருந்தும் அவர்கள் என் மீது கொண்ட சந்தேகத்திற்கு காரணம் நான் வெளிநாடு சென்று வந்த நான்கு மாதகாலமே ஆகிவுள்ளது என்பதாலேயே, அங்கு சிலர் நான் வெளிநாடு சென்று ஆயுதப் பயிற்சி பெற்று வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்கள்.

எனக்கு பயமே எனது பிள்ளைகள் மற்றும் மனைவியை குறித்தே. இவ்வளவு நாட்களாக நிரபராதியாக இருந்த நான் குறிப்பிட்ட நொடிக்குள் பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டுள்ளேன். நான் ஆடைச் தொழிற்சாலையில் முகாமையாளராக செயற்படுகின்றேன். நான் நிரபராதி என்பதை நான் அறிவேன், எனது வீட்டார்களும் அறிவார்கள், அதேபோல் தேவாலயத்தின் அருட்தந்தைமார்களும் அறிவார்கள். இருந்த போதும் இதனால் எனக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டள்ளது. எனக்கு சமூகத்தை சந்திக்கவும் அச்சமாக உள்ளது.இந்த விடயங்களினால் என் பிள்ளைகளுக்கு ஏதாவது நிகழ்ந்தால் நான் உயிருடன் இருப்பதில் என்ன இலாபம் என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

30 வருடகால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டிருந்த நாம் இப்போது முகம் கொடுத்திருப்பது அதையும் விட மிக பயங்கரமான நிலைமையாகும். இப்போதுள்ள நிலைமையில் யாரையும் சந்தேகத்துடன் பார்க்காமல், எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும்.

இவ்வாறான நிலைமைகளின் போது ஊடகத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கும் பாரிய பொறுப்பு இருக்கின்றது. இன்று அரோசனுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையை போன்று வேறொருவருக்கும் ஏற்பட கூடாது என்பதை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். ஊடகங்கள் எப்போதும் உண்மையான உறுதிப்படுத்திய செய்திகளை மாத்திரமே வெளியிட வேண்டும்