குருநாகல் – ஹெட்டிபொல நகரில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பதற்றநிலையை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் உடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் அங்கு ஒரு சில குழுக்களினால் கடைகள் பொது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதை அடுத்ததே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு படையினர் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அங்கு மாலை 2 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்தும் சில பகுதிகளில் உள்ள கடைகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன