குளியாப்பிட்டிய பகுதியில் வியாபாரநிலையம் ஒன்றின் மீது நேற்றையதினம் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட மூவரை கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றையதினம் குளியாப்பிட்டி, தும்மலசூரிய , பிங்கிரிய பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ள நிலையில் அப்பகுதிகளில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சில பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.