சரத் பொன்சேகா தொடர்பில் ஜனாதிபதிக்கு இன்று ஐ.தே.கட்சியினால் கையளிக்கப்படவுள்ள கடிதம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 6, 2019

சரத் பொன்சேகா தொடர்பில் ஜனாதிபதிக்கு இன்று ஐ.தே.கட்சியினால் கையளிக்கப்படவுள்ள கடிதம்!



ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை சட்ட ஒழுங்குகள் அமைச்சராக நியமிக்க கோரி, ஐக்கிய தேசிய கட்சியின் 89 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த கடிதம் நேற்று நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் இன்று வரையில் 89 பேர் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஹர்ச டி சில்வா, பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் தற்போது சிக்கல் இல்லை என்றாலும், தத்தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதா? இல்லையா? என்பது குறித்து பெற்றோரே தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் வருகை நேற்று குறைவாக இருந்த போதும், பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்த நம்பிக்கை பெறறோருக்கு ஏற்படும் போது மாணவர்களின் வரவும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சந்திப்பை அடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் துஸார இந்துநில், அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்லவின் பணிக்குழு உறுப்பினர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டமை தொடர்பாக பதில் வழங்கினார்.

லக்ஷ்மன் கிரியல்ல நேற்றையக் கூட்டத்தில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ள தமது பணியாளர்களால் தயாரிக்கப்பட்ட கடிதத்தில் ஜனாதிபதியை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையிலோ அல்லது இனப்பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையிலோ எந்த விடயமும் இல்லை என்று கூறியதாகவும் துஸார இந்துநில் குறிப்பிட்டார்