காத்தான்குடியில் மேலும் 7 சந்தேகநபர்கள் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 6, 2019

காத்தான்குடியில் மேலும் 7 சந்தேகநபர்கள் கைது



ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீம் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத்தின் உறுப்பினர்கள் 7 பேர் காத்தான்குடியில் கைதாகியுள்ளனர்.

அவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத்தின் செயற்பாடுகளுக்கு நேரடி ஒத்துழைப்புகளை வழங்கி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர்கள் நீண்டகாலமாகபல்வேறு இடங்களில் பயிற்சிகளையும் வழங்கி வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் தற்போது காத்தான்குடி காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா - பளக்பூல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத்தின் பயிற்சி முகாம் குறித்த மேலதிக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக இறுதிக்கட்ட பயிற்சிகளை அவர்கள் இந்த முகாமிலேயே மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.