நேற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவன் உயிரிழந்துள்ளதாக இந்திய பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது.
அனால் அந்த சம்பவத்தில் உயிரிழந்தது தங்கள் அமைப்பைச் சார்ந்தவர் என ஐஎஸ் அமைப்பின் செய்தி இணையதளமான அமாக் செய்தி நிறுவனத்தில் ‘Amaq News Agency’ல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை விலயாஹ் ஆஃப் ஹிண்ட் (Wilayah of Hind) என்ற பகுதியை தங்களுக்கு சொந்தமான இடம் என்று உரிமைகோரியுள்ளமையும் இந்திய அரசாங்கத்துக்கு எரிச்சலை உண்டாக்கியதோடு இந்திய உயர்மட்டத்தில் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் இலங்கையில் தற்கொலை தாக்குதலை நடத்தி 250 கு மேற்படட உயிர்களை பலியெடுத்த சம்பவத்தை தொடர்ந்து , இந்தியாவிலும் இவ்வாறு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளவேளையில் இவ்வாறு ஐஸ்இன் அறிவிப்பு இந்திய புலனாய்வுத் துறையினை உசாரடைய வைத்துள்ளது