சட்டம் ஒழுங்கு அமைச்சு அல்லாத வேறு எந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்க தான் தயாரில்லையென பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
தனக்கு வேறு ஒரு அமைச்சுப் பொறுப்பை தந்து பாதுகாப்புச் சபையின் ஆலோசகராக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், சட்டம் ஒழுங்கு அமைச்சு தவிர்ந்த எந்தவொரு அமைச்சையும் தான் போறுப்பேற்கத் தயாராக இல்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.