குளியாப்பிட்டியில் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் இன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏதண்டவெல முஸ்லிம் பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் சில தளபாடங்களையும் உடைத்துவிட்டு , பக்கத்தில் இருந்த சிறு ஹோட்டல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு சென்றுள்ளனர்.
மர்ம குழு அருகில் இருந்த பாடசாலைக்கு சென்று பூச்சாடிகளை வீசி சேதப்படுத்திவிட்டு சென்றதாகவும் அறியமுடிகின்றது.
குளியாபிட்டிய பொலிஸார் தற்போது களத்துக்கு விஜயம் செய்து CCTV உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்