இலங்கையை உலுக்கிய தற்கொலை தாக்குதல் தொடர்பில் மௌனம் கலைத்த கருணா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 1, 2019

இலங்கையை உலுக்கிய தற்கொலை தாக்குதல் தொடர்பில் மௌனம் கலைத்த கருணா!



கிட்டதட்ட ஒன்பது மாதங்களுக்கு முன்னர் திவயின பத்திரிகைக்கு விரிவான விளக்கத்தை கொடுத்திருந்தேன்.

அதாவது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் கிழக்குத் தளபதி கருணா தெரிவித்துள்ளார்..

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது...

இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் பாதுகாப்பு தளர்த்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தேன்.

இது தொடர்பில் நாம் அடிக்கடி அறிக்கையெல்லாம் விட்டிருந்தோம். படைகளுக்குரிய அதிகாரங்களை குறைத்ததன் விளைவு தான் இது.

மஹிந்த ராஜபக்ச இருந்திருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது. இவர்கள் படைகளின் அதிகாரங்களை குறைத்த காரணத்தினால் அதிலும் குறிப்பாக இராணுவ புலனாய்வாளர்களின் செயற்பாடுகள் முற்றாக குறைக்கப்பட்டுள்ளன.

இதெல்லாம் செய்த காரணத்தினால் தான் இந்த ஊடுறுவல் நடந்துள்ளது. பலரால் இது வெளிப்படையாக பேசப்பட்ட விடயம். அச்சுறுத்தல் இருக்கின்றது என்பது பற்றி.

அதேவேளை 11ஆம் திகதி என்னுடைய பாதுகாப்பு அதிகாரிக்கு கூட கடிதம் வந்தது. இந்தந்த இடங்களில் தாக்குதல் நடக்கப் போவதாக 11ஆம் திகதிக்கு கையெழுத்திப்பட்ட கடிதமொன்று வந்தது.



அதில் சில முஸ்லிம் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. காத்தான்குடியை மையப்படுத்திய ஆட்கள் தான் இதில் சம்பந்தப்பட போவதாக தெரிவிக்கப்பட்டது.

தலைமை காரியாலயத்தில் இருந்து எனது பாதுகாப்பு அதிகாரிக்கு கூட கடிதம் வந்தது. அந்த கடிதம் கூட எம்மிடம் உள்ளது.

இவ்வாறு கடிதம் அனைவருக்கும் வந்தும் யாரும் தேசிய பாதுகாப்பில் அக்கறை காட்டவில்லை. அதேபோன்று ஜனாதிபதி வெளிநாட்டிற்கு போயிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சை அவர் யாரிடமும் பொறுப்பு கொடுத்துவிட்டு போகவில்லை. வழமையா பாதுகாப்பு அமைச்சர் வெளியில் போவதாயின் அதனை இன்னொருவருக்கு வழங்க வேண்டும்.



அத்துடன் இந்த விடயம் தனக்கு தெரியாது என ரணில் கூறுகிறார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வந்த கடிதம் எப்படி நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வராமலிருந்திருக்கும்.

பிரமருக்கு இந்த விடயம் தெரியாது என்பது வேடிக்கையான விடயம். இது தொடர்பில் நாம் கதைத்து அலர்ட் விட்டாலும் எதுவும் நடக்கப் போவதில்லை.

எதிர்வரும் காலத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

அத்தோடு தேவைப்படும் பட்சத்தில் நாமும் தேவையானதை செய்வோம். நாம் நிர்வாகத்தில் இருக்கும் போது இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கவில்லை.



சர்வதேச பின்னணியுடன் நடந்த தாக்குதல் தான் இது. இந்த வெடிபொருட்களில் பயன்படுத்தப்படிருக்கின்ற சி4 வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

சி4 வெடிமருந்தை இலங்கையின் எந்த இடத்திலும் எடுக்க முடியாது. இந்த வெடிபொருட்கள் எங்கே இருந்து வந்துள்ளன? எவ்வாறு கடத்தப்பட்டுள்ளன?

இதேவேளை தொழிநுட்பமும் பார்க்கப்பட வேண்டும். சிறந்த பயிற்றப்பட்ட ஆட்கள் இல்லாமல் இந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க முடியாது.

இவற்றையெல்லம் வைத்து பார்க்கப்போனால் இது சர்வதேச பின்னணியுடன் நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

கேள்வி - தவ்ஹுத் ஜமாத் அமைப்பின் தலைவரும் இந்த சம்பவத்தில் இறந்துள்ளாரா? அவர் இதற்கு முன்னர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அல்லவா?

ஆமாம் அவர் இறந்துள்ளதாக தான் தெரிவிக்கின்றார்கள். அத்துடன் அவன் வீடியோ வெளியிட்டுள்ளான். இன்னும் இவர்கள் உஸார் அடைய வேண்டும் என்னவென்றால் இந்த அரசாங்கமானது வெளிநாட்டு முஸ்லிம் வர்த்தகர்களை ஊக்கப்படுத்தினார்கள்.

தற்பொழுது அவர்களின் பின்னணி ஆராயப்பட வேண்டும். இதற்கு மத்தியில் இலங்கைக்கு மீண்டும் மீண்டும் குழப்பகரமான நாடு என்ற பெயர் வந்து கொண்டிருக்கிறது.

நாம் யுத்தம் முடிந்த பின்னர் தொடர்ந்து அமைதிக்காக குரல்கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இவர்களின் அலட்சிய போக்கு காரணமாக தற்போது மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.



முக்கியமாக இந்த அரசாங்கம் செய்கின்ற பிழை என்னவெனில் படை அதிகாரிகளையும், நாட்டிற்காக சேவையாற்றியவர்களையும் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதில் நிற்பது தான்.

மஹிந்த அரசாங்கத்தை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர்களை உள்ளே அனுப்ப வேண்டும் என நின்றார்களே தவிர தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை.

அதற்கு இவர்கள் பொறுப்பெடுக்க வேண்டும். வேறு நாடுகள் என்றால் பொறுப்பானவர்கள் பதவி விலகியிருப்பார்கள். இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நாம் இது தொடர்பில் அடிக்கடி சுட்டிக்காட்டியுள்ளோம்.

கேள்வி - இவர்களை எந்த வழியில் கட்டுப்படுத்த முடியும்,

அவசர கால சட்டத்தை கொண்டு வந்து படைக்குரிய அதிகாரத்தை கொடுக்க வேண்டும். அப்படியானால் மட்டும் தான் இவர்களை கட்டுப்படுத்த முடியும்.

மற்றும் தொய்வடைந்துள்ள புலனாய்வுகளை கட்டியெழுப்ப வேண்டும்.

வெளிநாட்டு வர்த்தகர்கள் தொடர்பில் கவனம் கொள்ள வேண்டும்.

அத்துடன் இவர்களுக்கு நிதி கட்டமைப்புகள் எங்கிருந்து வந்துள்ளது. யாரால் வழங்கப்பட்டுள்ளது அரசயில்வாதிகளின் பங்கு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும்.

இவர்களை கண்டிப்பாக பிடிக்கலாம். அரசு இப்போ தான் உஸார் அடைந்துள்ளது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்ட்ட விடயம்.