வவுனியாவில் சொப்பர் விமானங்களைத் தாக்கும் 85 குண்டுகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
வவுனியா- ஈரப்பெரியகுளம் பொலிசாஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில், நேற்று (திங்கட்கிழமை) மாலை அலகல்ல மற்றும் அளுத்கம பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் அவர்கள் பல மணி நேரம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது குறித்த பகுதியிலிருந்து சொப்பர் விமானங்களைத் தாக்கும் 85 குண்டுகளை கண்டுபிடித்த அவர்கள், அதனை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம், நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதியில் மேலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.