சுவிஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
42 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அபராதம் செலுத்த பணம் இல்லாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக லூசெர்ன் நகரில் அமைந்துள்ள தடுப்பு காவல் மையத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாகவே குறித்த இலங்கையர் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவரது மரணத்திற்கான சரியான காரணத்தினை கண்டறியும் நோக்கில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சுவிஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் செய்த குற்றம், அவரது பெயர் உள்ளிட்ட எந்த தகவலையும் சிறை நிர்வாகம் வெளியிட மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.