இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் முகப்புத்தகத்தில் பதிவிட்டார் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சிலாபம் தேக்கவத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய அப்துல் ஹமீத் மொஹமட் ஹஸ்மார் இன்று (திங்கட்கிழமை) சிலாபம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதுகுறித்த நபர் முகப்புத்தகத்தில் இட்ட பதிவின் காரணமாகவே நேற்று சிலாபம் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.இதன் பின்னரே நீதிவான் அவரை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.