வவுனியாவில் பூட்டியிருந்த வீட்டில் இராணுவத்திற்கு கிடைத்த அதிர்ச்சி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 7, 2019

வவுனியாவில் பூட்டியிருந்த வீட்டில் இராணுவத்திற்கு கிடைத்த அதிர்ச்சி!



வவுனியா-மன்னார் வீதி சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை பதினைந்து அடையாள அட்டை மற்றும் பல ஆவணங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சாளம்பைக்குளம் பகுதியில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது பூட்டியிருந்த வீட்டிலிருந்து அச்சுப்பிரதி செய்து லெமிலன்ட் செய்யப்பட்ட பதினைந்து அடையாள அட்டைகள் மற்றும் சில ஆவணங்களை மீட்டெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பூவரசங்குளம் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

எனினும் இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.