இரகசிய தகவலையடுத்து வவுனியாவில் சிக்கிய கிழக்கு நபர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 7, 2019

இரகசிய தகவலையடுத்து வவுனியாவில் சிக்கிய கிழக்கு நபர்



வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஒருவரை இன்று காலை வவுனியா பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளின் போது அவரது அடையாள அட்டை கிழக்கு மாகாணத்தினை கொண்டதாக காணப்பட்டதனையடுத்து குறித்த நபரை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்