உயிர்த்த ஞாயிறு தற்கொலை குழுவுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்த மொஹமட் ரில்வான் என்ற வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை மாமல்ல பகுதியை சேர்ந்த இவர், மாபொல நகரசபையின் முன்னாள் உறுப்பினராவார்.
சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் குறுகிய காலத்தில் மில்லியனராக மாறினார் என தெரிவிக்கப்படுகிறது. சரக்கு கையாளும் நிறுவனமொன்றை அவர் நடத்தி வருகிறார்.
மாபோலாவில் மூன்று மாடி சொகுசு வீட்டை வைத்திருந்தார். இதுதவிர இன்னொரு சொகுசு வீட்டையும் வைத்திருக்கிறார். அவரது இரண்டு மனைவிகளும் அந்த வீடுகளில் வசித்து வருகிறார்கள்.
அவரிடமிருந்து 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இஸ்லாமாபாத்தில் பணக்கொடுக்கல் வாங்கல்களில் சம்பந்தப்பட்டார் என்றும், சஹ்ரான் குழுவிற்கு நிதி வழங்கினாரா என்றும் விசாரணையாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
இவர் டுபாய்க்கும் பயணமாகியுள்ளார் என்றும், அங்கு மதூஷ் மற்றும் கஞ்சிபான இம்ரானின் வீடுகளில் தங்கியிருந்தார் என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.