தெற்கு கடற்படை முகாமில் டெங்கு நோய் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 16, 2019

தெற்கு கடற்படை முகாமில் டெங்கு நோய்

காலி - தெற்கு கடற்படை முகாமிலுள்ள முப்பதிற்கும் அதிகமான சிப்பாய்கள் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு மாத காலப்பகுதியினுள் காலி மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று காரணமாக 1300க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய காலி தெற்கு கடற்படை முகாம் வளாகத்தில் டெங்கு நுளம்பு குடம்பிகள் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஒருவார காலப்பகுதியினுள் டெங்கு குடம்பிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.