யாழில் இந்திய பிரஜைகள் இருவர் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 16, 2019

யாழில் இந்திய பிரஜைகள் இருவர் கைது!

இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வருகைதந்து நகை தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இந்திய பிரஜைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரையும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து மூன்று மாத சுற்றுலா விசாவில் இரு இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைகள் செய்யும் தொழிலகத்தில் நகை செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்று விசாரணைகளை நடத்தியபோதே அவர்கள் சுற்றுலா விசாவில் வந்து தொழிலில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இருவரையும் கைது செய்த பொலிஸார், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.