மஹிந்தவிற்கு குண்டுத் துளைக்காத வாகனம் கோரும் ரணில் - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, May 29, 2019

மஹிந்தவிற்கு குண்டுத் துளைக்காத வாகனம் கோரும் ரணில்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அமைச்சரவையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கு குண்டு துளைக்காத மோட்டார் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய அனுமதி வழங்குமாறு கோரி அமைச்சரவையில் பிரதமர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

இந்த யோசனை குறித்து ஆராய்ந்து பதிலளிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த யோசனை குறித்து அடு;த்த அமைச்சவை கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.