இன்று காத்தான்குடி தீவிரவாதியின் வீடு சுற்றிவளைப்பு! திடுக்கிடும் காணொளி சிக்கியது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 5, 2019

இன்று காத்தான்குடி தீவிரவாதியின் வீடு சுற்றிவளைப்பு! திடுக்கிடும் காணொளி சிக்கியதுகாத்தான்குடி பகுதியில் படையினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்ககையின்போது தேசிய தெளஹீத் ஜமாத் இயக்கத்தின் வீடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு நுவரெலியா பிரதேசத்தில் நடத்தப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

சாய்ந்தமருது முற்றுகையின் போது குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்த முஹம்மத் ரில்வான் பயங்கரவாதி ட்டோனர் புகைப்படக் கருவியைப் பயன்படுத்தி அந்தப் பிரதேசத்தை படத்தை இந்த வீட்டிலிருந்து எடுத்துள்ளார் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அனுராதபுரம், நாச்சாதுவ பிரதேசத்தில் பிரதேசத்தில் களஞ்சியத்திலிருந்து மிகவும் அந்தரங்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு லொறிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த லொறி வெளியே தெரியாதவாறு நெல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இரத்மலானை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குற்ற ஒழிப்புப் பிரிவின் தகவல்களுக்கு அமைய இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்துகம - வெலிப்பன்ன பிரதேசத்தில் இருந்து பாழடைந்த இடத்திலிருந்து உள்ளுர் தயாரிப்பான 3 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை முப்படையின் சீருடைக்கு ஒத்ததான பெருந்தொகையான துணி ஹெம்மாத்தகம பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.