அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை எனவும் நாளை அல்லது நாளை மறுதினம் மேலும் குண்டுகள் வெடிக்கலாம் எனவும் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டி இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,
பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். மேலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
எனினும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை தற்போது வழமைக்கு திரும்பி வருகிறது.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக பொலிஸ் மற்றும் முப்படையினர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.