திமுக கையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 29, 2019

திமுக கையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்!

பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ், முக்கிய உறுப்பினர்கள் அவையில் இல்லாமையால் திண்டாடுகிறது, அப்படியொரு நிலைமை முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஏற்பட்டுள்ளது, காங்கிரசின் முக்கிய தலைவரும் பொருளாதார மேதையும் என்று  கூறப்படுபவர் மக்களவையில் இல்லாதது அவர்களுக்கு பெரும் அவமானத்தை உண்டுபண்ணியுள்ளது. 2013ஆம் ஆண்டு அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவரின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அசாம் மாநிலத்தில் காங்கிரசுக்கு  மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்கக் கூடிய அளவுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் இல்லாததால் காங்கிரஸ் உயர்மட்டம் திமுகவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதகா தகவல்கள் வெளியாகியுள்ளது.

3 மாநிலங்களவை உறுப்பினர்களை அனுப்பக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள  திமுக ஏற்கனவே மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுவிட்டதால், மீதமுள்ள 2 இடங்கள் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற பேச்சுக்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டது, அதில் ஒன்றினை  மன்மோகன்சிங்கிற்கு பெற்றுக்கொள்வதற்கு காங்கிரஸ் மேலிடம் முனைப்பு காட்டிவருவதாகவும், அனால் திமுகவினர் ஏற்கனவே 10 இடங்கள் கூட்டணியில் ஒதுக்கி அதில் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் எனவே அவர்களுக்கு கொடுக்கவேண்டாம் என்று ஸ்டாலினிடம் தெரிவிக்கின்றனராம். 

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ்கட்சியின் தமிழக தலைவர் அழகிரியிடம் ஊடகவியலாளர் கேட்டபோது, “இவையனைத்தையும் காங்கிரஸ், திமுக தலைவர்கள் கூடிப் பேசி முடிவு செய்வார்கள். மன்மோகன் சிங் மிகப்பெரிய தலைவர். மாபெரும் அறிஞர். அவர் தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் என்று சொன்னால் அதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். திமுக தலைவரும் அதனை வரவேற்பார். ஆனால், அவர் போட்டியிடுவாரா என்று சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லை. எனக்கு அந்தத் தகுதியும் இல்லை” என்று பதிலளித்தார், எனவே திமுக தனது தகுதியை நிலைநிறுத்துமா இல்லை கூட்டணி தர்மம் என்று விட்டுக்கொடுக்குமா  முடிவு எடுக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .

2009 ஈழத்தில் தமிழினம் படுகொலை செய்தபோது அதற்கு  உதவிய காங்கிரஸ் அரசிடம் திமுக கூட்டணிக்காய் பதவிகளுக்காய் பேரம் பேசினார்கள் இன்று மாறாக 10 வருடம் கழிந்து அதே  திமுகவிடம் கையேந்தவேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது துரோகத்துக்கு காலம் பதில் சொல்லும் என்பதன் வெளிப்பாடு.