சைபர் தாக்குதல்களிலிருந்து இணையத்தளங்களை பாதுகாக்க விசேட திட்டம் - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, May 21, 2019

சைபர் தாக்குதல்களிலிருந்து இணையத்தளங்களை பாதுகாக்க விசேட திட்டம்

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு மென்பொருளொன்று அறிமுகப்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான குவைத் தூதரகம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட, நாட்டின் 13 இணையத்தளங்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது