ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவுனரான அனில் அம்பானி திரும்பப்பெற்றுள்ளார்.
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடுகள் காணப்படுவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக குற்றம் சுமத்திவருகின்றது.
இந்நிலையில், இதனை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மீது அனில் அம்பானி அவதூறு வழக்கினை தொடர்ந்திருந்தார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நிறைவடைந்து தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அனில் அம்பானியின் குறித்த முடிவு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தன. இதனை பல்வேறு அரசியல் கட்சிகளும் மறுத்து வருகின்றன.
இந்நிலையில் அனில் அம்பானியின் குறித்த செயல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது