சூடானில் அடுத்த மூன்று வருடகாலத்திற்கு இடைக்கால மக்களாட்சியை நிறுவதற்கு, அந்நாட்டு இடைக்கால இராணுவச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
சூடானில் கடந்த மூன்று தசாப்தகாலமாக ஆட்சிசெய்து வந்த தொடரும் ஒமர் அல் பஷீர் போராட்டங்களுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி பதவி நீக்கப்பட்டு, அந்நாட்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
இதனை அடுத்து இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே அந்நாட்டு இராணுவத் தலைவர்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
எதிர்த்தரப்பினருடன் இதற்கு இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால்அதிகாரத்தை பகிர்தல், இறையாண்மை சபையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அடுத்த ஆட்சிக்கான சகல விடயங்களும் 24 மணித்தியாலங்களுக்குள் இறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
300 உறுப்பினர்கள் இடைக்கால சட்டசபை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் இருக்க வேண்டும். இதில் 67 வீதமானோர் சுதந்திரம் மற்றும் மாற்றத்திற்கான கூட்டணியிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள், ஏனையோர் ஏனைய அரசியல் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.
அத்தோடு, முதல் 6 மாத காலத்தில் கிளர்ச்சியாளர்களுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் இடைக்கால இராணுவச் சபை அமைக்கப்பட்டு ஆட்சி நடத்தப்படுகின்ற போதிலும் மக்களாட்சியை கோரி, தலைநகர் கார்டூமில் மக்கள் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் தீவிரமடைந்து நேற்றய தினம் ஐவர் உயிரிழந்தனர். இந்நிலையில், மக்களாட்சிக்கு ந்நாட்டு இடைக்கால இராணுவச் சபை இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது