பயங்கரவாதிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான வீடுகள் முற்றுகை – பொலிஸார் அதிரடி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 15, 2019

பயங்கரவாதிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான வீடுகள் முற்றுகை – பொலிஸார் அதிரடி


தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான வீடுகளை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் கொழும்பு, கல்கிசை, பாணந்துறை, கொச்சிக்கடை மற்றும் வத்தளை பகுதிகளிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதில் கொழும்பில் மட்டும் 3 வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட அதிரடி படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுவந்தனர்.

அந்தவகையில் தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 10 பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த 85 பேரில் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் 55 பேர் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர்.