வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட இராணுவ சீருடை அணிந்த நபர் யார்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 15, 2019

வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட இராணுவ சீருடை அணிந்த நபர் யார்?


நாத்தாண்டிய துன்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவத்தின் போது இராணுவ சீருடையுடன் வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட நபர் தொடர்பில் இலங்கை இராணும் தகவல் கேட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை இராணுவப் படை வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

துன்மோதர பிரதேசத்தில் ஒரு நாசகார குழுவினர் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட்ட போது அங்கு இராணுவ சீருடைக்கு ஒத்த சீருடையினை அணிந்த ஒரு நபர் குறித்த வன்முறை செயற்பாடுகளை வேடிக்கை பார்பது போல் ஒரு காணொளியொன்று இலங்கை இராணுவத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த இக் காணொளியை அவதானித்த இராணுவமானது இச் சம்பவத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட சந்தேக நபர் இராணுவத்தில் சேவையாற்றும் படைவீரரா என்பதை இனங்கானும் முகமாக விசேட விசாரனையை முன்னெடுத்துள்ளது.

மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை இனம் கண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை இராணுவம் பொது மக்களிடம் உதவியை நாடுகின்றது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இராணுவ வீரரென உறுதிப்படுத்தப்படுமாயின் இராணுவத்தால் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதன் பிரகாரம், இச் சம்பவம் தொடர்பாக யாதாயினும் அறிந்திருப்பின் இராணுவ பொலிஸ் படையணியின் விசேட விசாரனை பிரிவிற்கு 011 2514280 எனும் தொலைபேசி எண்ணி ஊடாக தெரிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.