இலங்கை குண்டு வெடிப்பு குறித்து பேசிய இயக்குனர் மு.களஞ்சியம் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 16, 2019

இலங்கை குண்டு வெடிப்பு குறித்து பேசிய இயக்குனர் மு.களஞ்சியம் கைது!

இலங்கை குண்டு வெடிப்பைக் கண்டித்துப் பேசியதால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட இயக்குனர் சோழன் மு.களஞ்சியம் முன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளது.

தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவரும், திரைப்பட இயக்குனருமான சோழன் மு.களஞ்சியம் அவர்களுக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ''இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை கண்டித்து'' நாம் தமிழர் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் சோழன் மு.களஞ்சியம் அவர்கள், இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக் குறித்து விரிவாக பேசினார். அப்பொழுது இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட அரசியல் கட்சியை விமர்சித்து கடுமையாக பேசியுள்ளார்.



இவரது பேச்சு தொடர்பாக நுங்கம்பாக்கம் பொலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும், இரு தரப்பினருக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும், இயக்குனர் சோழன் மு.களஞ்சியத்தின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இயக்குனர் சோழன் மு.களஞ்சியத்தை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறை தீவிரமாக முயற்சித்தது. ஆகவே, சென்னை உயர் நீதிமன்றமத்தில் முன் ஜாமின் கேட்டு சோழன் மு.களஞ்சியம் அவர்களின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ''உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு ஆர்.பிரபாகரன் இராமச்சந்திரன்'' அவர்கள் ஆஜராகி, இந்திய இறையாண்மைக்கு எதிராக தனது மனுதாரர் எதுவும் பேசவில்லை என்றும், இரு தரப்பினருக்கும் இடையே மோதலை உருவாக்கும் வகையில் அவதூறாகவும் எதுவும் பேசவில்லை. இவரது பேச்சைத் தொடர்ந்து எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஆகவே மனுதாரர் மீது பொய்யான குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.


இதையடுத்து, மனுதாரர் இயக்குனர் சோழன் மு.களஞ்சியம் அவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், இயக்குனர் மு. களஞ்சியம் அவர்களுக்கு,

ரூ.10-ஆயிரத்துக்கான சொந்த ஜாமினும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமினும் செலுத்தி, எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம்.

விசாரணை அதிகாரி முன் தினந்தோறும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி இரண்டு வாரத்திற்கு கையெழுத்திட வேண்டும்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.