போலி தகவல்கள் பரவுவதை தடுக்க விசேட தடுப்பு பிரிவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 15, 2019

போலி தகவல்கள் பரவுவதை தடுக்க விசேட தடுப்பு பிரிவு!

சமூகவலைத்தளங்களில் போலி தகவல்கள் பரப்புவதை தவிர்ப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவல்களை பரப்புவதன் காரணமாக சமூகங்களுக்கிடையில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுகின்றன. சிலாபத்தில் இடம்பெற்ற சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

இவ்வாறான சமூகவலைத்தளங்களில் போலி தகவல்கள் பரப்புவதை தவிர்ப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விஷேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவானது சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்காக முழு முயற்சியுடன் செயற்படுவார்கள். சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறு போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவசரகால சட்டத்தின் கீழ் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

மேலும் சிவில் மற்றும் அரசியல் சர்வதேச ஒப்பந்தத்தின் மூலம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.