ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு? - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, May 14, 2019

ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு?அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரேரணை இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படும் அதுரலியே ரத்தன தேரர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று ஒரு தொகுதி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, மகிந்தானந்த அழுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, வியாழேந்திரன், எஸ்.பி திசாநாயக்க உள்ளிட்ட 22 பேர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதேவேளை இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் தவறுகள் இருப்பதாகவும் இதனைச் சமர்ப்பிக்க வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.