கொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசனங்களை பொருத்திய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய காத்தான்குடியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மொஹமட் ஆதம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.