யாழில் வாள் உள்பட கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 5, 2019

யாழில் வாள் உள்பட கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர் கைது!யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் உள்பட கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது.

நாவாந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வாள் ஒன்று, கைக் கிளிப்புகள் உள்பட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

தப்பி ஓடிய இருவர் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.